குடும்பத்தில் இருந்து தொழில் வரை, உங்களுக்கு தொடர்ந்து ஏற்படக்கூடிய தேவைகளை கவனித்துக்கொள்ளும் நோக்கத்துடன் மல்டிக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. அது இத்துடன் முடிவதில்லை.இதன் X-Port TM அம்சத்துடன், மல்டிக்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும், தொழில் செய்பவரின் வாழ்விற்கு முன்பு எப்போதும் இருந்திராத மாற்றக்கூடிய தன்மை மற்றும் பயன்பாடு. இதுதான் இந்தவகையில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் சாதனமாகும். இது வழக்கமான நடைமுறையை மாற்றக்கூடிய தன்மை கொண்டதாகும். இதுதான் புதிய 3-இன்-1 ஆகும்.

குடும்பம்

மல்டிக்ஸ் 5 நபர்களைக் கொண்ட குடும்பத்தை சௌகரியமாக அமர வைக்க முடியும். இது மிகவும் கடுமையான நிலப்பரப்பினையும் மிகவும் சௌகரியமாக பயணிக்கும் மேலும் ஏற்படக்கூடிய ஏதேனும் தாக்கத்திற்கு எதிராக பாதுகாப்பினை வழங்க உருவாக்கப்பட்டுள்ளது. சாலைப் பயணங்கள், வெளியே செல்லுதல் மற்றும் குடும்பத்தினருடன் விடுமுறைகள் ஆகியவற்றிற்கு ஒரு புத்தம் புதிய தோற்றத்தை வழங்குவதற்கு தயாராகுங்கள்.

தொழில்

உங்களது தொழில் கருவிகளுக்கான போதுமான இடவசதியை மல்டிக்ஸ் அளிக்கிறது. இருக்கைகளை பின்னோக்கி மடக்குங்கள் மேலும் சாதனை நேரமான 3 நிமிடங்களில், நீங்கள் என்ன வேண்டுமானாலும் எடுத்துச் செல்வதற்கான போதுமான பெரிய இடவசதியை நீங்கள் பெறுவீர்கள். பணியை செய்து முடிக்கும் நோக்கத்துடன் – உருவாக்கப்பட்டது மல்டிக்ஸ் ஆகும்.

பவர் ஜெனரேட்டர்

இதன் X-Port TM அம்சத்துடன், மல்டிக்ஸ் 3 கிலோவாட்டுகள் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் –வீடுகளுக்கு வெளிச்சம் அளிக்கவும் இசை சாதனங்கள், விவசாய கருவி மற்றும் இதர தேவையான கருவியையும் இயங்கச் செய்யவும் இது போதுமானதாகும். இதன் விளைவு? பல்வேறு பயன்பாடு. உபயோகம். மின்சாரம்!

 

Rotate back to portrait mode.